Warning: Constant WP_HOME already defined in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php on line 94

Warning: Constant WP_SITEURL already defined in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php on line 95
அல் குர்ஆனின் இலக்குகள் - Rishard Najimudeen
  • ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்
  • பக்கங்கள் – 45

அல்குர்ஆன் வசனங்கள் மறுமை வரை எவ்வித மாற்றங்களுக்கோ திரிபுகளுக்கோ உட்படாமல் பாதுகாக்கப்படும் என்பது எமது திடமான நம்பிக்கை. எனினும் அவ் வசனங்களை புரிந்து கொள்ளும் விதமும் புரிதல்களை பிரயோகிக்கும் முறைமையும் காலத்துக்குக்காலம் வித்தியாசப்பட்டு அமையும் எனவும் நம்புகிறோம்.

மனித அறிவு மற்றும் சமூக நிலைமை ஆகிய இரண்டும் வித்தியாசப்பட்ட புரிதல்களை கொண்டு வருகின்றன. அவ்வகையில் நவீன சூழலுக்கு ஏற்ப அல்குர்ஆனை அணுகிய முறை சற்று வித்தியாசமானது. ஆயத் ஆயத்தாக குர்ஆனை விளங்க முற்படுவது அன்றிலிருந்து பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறை. ஒவ்வொரு சூராக்களையும் அவை கொண்டிருக்கும் மையக் கருத்துடன் தொடர்புபடுத்தி சூராவின் மொத்த வசனங்களையும் புரிந்து கொள்ள முற்படும் விதம் இன்னொரு வகை. முழுக் குர்ஆனும் என்ன கூற வருகின்றது? அது எங்களை எங்கு அழைத்துச் செல்கின்றது? அது அடைய விரும்பும் இலக்குகள் யாவை? போன்ற கேள்விகள் நவீன காலத்தில் குர்ஆனை அணுகும் முறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இப்பின்னணியில்தான் “மகாசிதுல் குர்ஆன்” (அல்குர்ஆனின் இலக்குகள்) எனும் ஆய்வு முறைமை தோற்றம் பெறுகிறது.

குர்ஆனின் இலக்குகளை அறிவது மனித அறிவுக்குற்பட்டது. அறிவுத் தரத்திற்கேற்ப இலக்குகளை அடையாளப்படுத்துவதில் வித்தியாசங்கள் இருக்கலாம். இஜ்திஹாத் என்ற வகையில் பிழைகளும் இடம்பெற வாய்ப்புள்ளது. குறிப்பிட்டதொரு அறிஞர் அல்குர்ஆன் மீது ஆழமான அதேநேரம் முழுமையானதொரு வாசிப்பை பிரயோகித்த பின் அல்குர்ஆன் அடைய விரும்பும் இலக்குகளை தேர்ந்தெடுக்க ஆரம்பிக்கிறார். இது இஜ்திஹாத் என்ற வகையில் சரியாக இருப்பின் இரு நன்மைகளும் பிழையாக இருப்பின் ஒரு நன்மையும் நிச்சயம் அவருக்குண்டு.

இச்சிறிய புத்தகம் ஷெய்க் கர்ழாவி அடையாளப்படுத்திய இலக்குகளை எடுத்து எமது நாட்டு சமூக சூழலை கருத்தில் கொண்டு எழுதப்படுகிறது என்பதை கருத்தில் கொள்க. அல்குர்ஆன் கப்ருக்குள்ளால் உள்ளவர்களுக்காக ஓதப்படுவதற்கோ அல்லது மனப்பாடம் செய்து மீட்டி மீட்டி ஓதுவதற்காகவோ வந்த புத்தகம் அல்ல, அது மனித வாழ்வுக்கான மூலாதார புத்தகம், நாகரீகத்தை கட்டியெழுப்புவதற்கான உசாத்துணை என்பதை இப்புதிய அணுகுமுறை நிறுவும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

Share.
Leave A Reply