The post Ramadan & Reforming Religious Thought Among Sri Lankan Muslims first appeared on Rishard Najimudeen.
]]>The post Ramadan & Reforming Religious Thought Among Sri Lankan Muslims first appeared on Rishard Najimudeen.
]]>The post பெண்களை நடாத்தும் முறை _ நாகரிகத்தினதும் பண்பாட்டினதும் அளவு கோலாகும் first appeared on Rishard Najimudeen.
]]>மொழிபெயர்ப்பு -ஷெய்க் ஷாகிப் அப்துல் ஹலீம்
இமாம்களான புகாரியும் , முஸ்லிமும் நீண்டதொரு ஹதீஸில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதை அறிவித்துள்ளனர்:- குறைஷிக் கூட்டத்தவர்களான நாங்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஓர் சமூகமாக இருந்தோம். நாம் மதீனாவுக்கு வந்தபோது பெண்கள் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒர் சமூகத்தை கண்டோம் .எமது பெண்கள் மதீனா பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளலானார்கள். ஒரு நாள் நான் என் மனைவி மீது கோபம் கொண்டேன். உடனே அவள் என்னை எதிர்த்துப் பேசினாள். நான் என்னை எதிர்த்துப் பேசுவதை தடுத்தேன். “நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை ஏன் தடுக்கின்றீர்கள்? என்று கேட்டாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் அவரை எதிர்த்துப் பேசுகின்றனர். அவர்களில் ஒருவர் நாள் முழுதும் அவரை புறக்கணிக்கின்றார்” என்று கூறினாள். எனவே நான் உடனே சென்று (அவரது மகள்) ஹப்ஸாவை சந்தித்தேன். அல்லாஹ்வின் தூதரை எதிர்த்துப் பேசுகின்றீர்களா? என்று கேட்டேன். ஆம் என்று கூறினார் . உங்களில் ஒருவர் அவரை நாள் முழுதும் புறக்கணிக்கின்றீர்களா? என்று கேட்டேன். “ஆம்”என்று கூறினார். அப்படியாயின் உங்களில் இதை செய்தவர் நஷ்டம் அடைந்து விட்டார்! நாசம் அடைந்து விட்டார்! அல்லாஹ்வின் தூதரோடு கோபம் கொண்டதற்காக அல்லாஹ் அவரோடு கோபம் கொள்வான், அதன் காரணமாக அவள் அழிந்து விடுவாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கிறதா? நீ அல்லாஹ்வின் தூதரை எதிர்த்துப் பேசாதே! அவரிடம் எதையும் கேட்காதே! உனக்கு தோன்றுவதை என்னிடம் கேள்………… என்று நான் கூறினேன்.
இந்த ஹதீஸ் பல விடயங்களை சுட்டிக்காட்டுகின்றது:-
1. மக்காவாசிகளான குறைஷிகளிடத்தில் இல்லற பந்தமானது பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆணே தீர்மானம் எடுப்பவனாக இருந்தான். அவனே அந்தஸ்து மிக்கவனாக திகழ்ந்தான். அவனது குரல், பெண்ணின் குரலை விட ஓங்கியிருந்தது.எதனை செய்ய வேண்டும், எதனை விட்டு விடவேண்டும் என்பதை அவனே முடிவு செய்தான். பெண்ணுக்கு அதில் தலையீடு செய்ய முடியாதிருந்து.
2. மதீனாவாசிகளிடத்தில் இவ்விடயம் இதற்கு நேர்மாறானதாகவிருந்தது . அன்சாரிப் பெண்கள் ஆண்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். அல்லது அன்சாரிகள் தமது பெண்களிடம் ஆதிக்கத்தை விட்டுவிட்டார்கள் என்று கூறலாம் . எனவே அவர்களுக்கென ஓர் உயர் அந்தஸ்து இருந்தது. அவர்களது கருத்துக்கள் செவிசாய்க்கப்பட்டன. தமது கணவன்மார்களிடம் அவர்களுக்கு செல்வாக்கு இருந்தது. புகாரியின் ஒர் அறிவிப்பில் இருப்பது போல, “அன்சாரிப் பெண்களின் பண்பாடு” என்று உமர் விவரித்த நடத்தை இதுவாகும். மதீனத்து அன்சாரி பெண்களுக்குரிய இந்த மதிப்புமிகு அந்தஸ்தின் காரணமாக, வெட்கம், கூச்சம், சங்கடம் மிக்க விவகாரங்களில் புதிய மார்க்கத்தின் தீர்ப்புகளை கேட்பதிலும் ஆராய்வதிலும் அவர்களது துணிவின் மூலம் அன்சாரிப் பெண்கள் தனித்துவம் பெற்று விளங்கினர். இதோ குறைஷியரான, இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே, அன்சாரிப் பெண்களை பற்றி சாட்சி பகர்கின்றார் : “அன்சாரிகளின் பெண்கள் எவ்வளவு நல்ல பெண்கள்; அவர்களின் கூச்சம் மார்க்கத்தை பற்றி கேட்பதற்கும் அதைப் பற்றி ஆழ்ந்த விளக்கம் பெறுவதற்கும் அவர்களைத் தடுக்கவில்லை”.
3. மதீனாவிற்கு இடம்பெயர்ந்த குறைஷிப் பெண்கள், அன்சாரிப் பெண்களின் மூலம் தாக்கமுறலாயினர். அவர்களை பின்பற்றத் தொடங்கினர். ஒரு வகையான ஆதிக்கம் அல்லது எதிர்ப்பை கடைப்பிடிப்பதினூடாக கருத்துக்கள், முடிவுகள் மற்றும் நடத்தையில் தங்கள் கணவருக்கு நிகராக நின்றனர்.
4. அல்லாஹ்வின் தூதரின், மனைவிமார்களுடான நடத்தையும் உறவும் அன்சாரிகளின் முறைப்படியும் “அன்சாரிப் பெண்களின் பண்பாடு” க்கு ஏற்பவும் இருந்தது. அல்லது இன்னும் சரியாகச் சொல்வதானால், அன்சாரிகளதும் அன்சாரிப் பெண்களினதும் பண்பாடு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கொண்டு வந்த வழிகாட்டுதலுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பவே இருந்தது. அவரது மனைவிமார்கள் அனைவருக்கும் அவரோடு கலந்தாலோசிப்பதற்கும்; அவரது கருத்து, நடத்தை தொடர்பாக மாற்றுக் கருத்து சொல்வதற்கும்; கோபம், வெறுப்பை அல்லது பதிலளிக்கப்படாத கோரிக்கைக்காக அதிருப்தியை வெளிகாட்டும் வகையில் பகல் முழுதும் அவரை புறக்கணித்து நடப்பதற்கும் அவர் அனுமதித்ததோடு, பொறுத்தும் கொண்டார்.
5. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி, நபி அவர்களின் முன்மாதிரியையும் மதீனாவின் முன்மாதிரியையும் பின்பற்றிநடக்கலானார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியும் தனது மகளுமான ஹப்ஸாவிடமிருந்து தான் கேள்விப்பட்டவற்றை அதற்கு ஆதாரமாகக் கொண்டார். அதன் காரணமாக அவர் ஊக்கமடைந்து, உமரின் விவகாரங்களில் – அவர் கடும் போக்கிற்கு பெயர்பெற்றவர் – அவள், அவர் மீது கோபம் கொண்டு, சப்தமிட்டு அவரை எதிர்த்துப் பேசுவதற்கு முன் வந்தாள்.
பொதுவாக நாம் கூற முடியும்:- பெண்களை அணுகுவதில் நபிகளாரின் வழிமுறை; மரியாதை செலுத்துதல், கண்ணியப்படுத்துதல், சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்ளுதல் என்பவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுடான அன்சாரிகளின் பண்பாடும் அவ்வாறுதான் காணப்பட்டது. நபிகளாரின் வழிமுறைக்கு ஏற்பவே அது அமைந்திருந்தது. இது பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கம் நிலவி வந்த அரபு சூழலில் பெண்களை அணுகுவதில் ஓர் மடைமாற்றத்தை ஏற்படுத்தியது.
மாறாக, பெண்களின் மீது ஆண்களின் ஆதிக்கமும் ஆக்கிரமிப்பும் பண்டைய மற்றும் நவீன காலங்களில் அனைத்து சமூகங்களிலும் மக்களிடையேயும் நிலவும் எளிதான சூழ்நிலையாகும். இதில் எவ்வித சிறப்போ, தனித்துவமோ, உயர்வோ இல்லை. மாறாக சிறப்பு, தனித்துவம், உயர்வு ஆகியவை எதிர்நிலையில் அடையப்படுகின்றன. அதனால்தான் இஸ்லாம் வந்து மக்களை அதன்பால் நகர்த்தியது. சிறப்பு, தனித்துவம், உயர்வு இருப்பவற்றை நோக்கி பயிற்றுவித்தது. ஆணாதிக்கத்தை வழக்காகாக் கொண்ட தனி மனிதனுக்கோ, அதிலிருந்து வெளிவருவது எளிதானது அல்ல. இது உமரின் நிலைப்பாட்டிலும் அவர் தனது சமூகத்தை பற்றியும் தன்னைப் பற்றியும் கூறியவற்றிலும் தெளிவாகிறது. எனவே அவர் இறைத்தூதருக்கும் அவரது மனைவிமார்ளுக்கும் இடையே நிலவும் உறவு முறையின் யதார்த்தத்தை அறிந்தபோதும், அவரது மனைவி (ஆத்திகா) தனது வாக்குவாதத்தின் வலிமையால் அவரை “தோற்கடித்தபோதும்”, அந்த விடயத்தை அவர் ஜீரனிக்கவில்லை.
குறிப்பாக, தனது மகள் தங்கள் இல்லற வாழ்வில் கூட, அல்லாஹ்வின் தூதரை விமர்சிக்கவும் கோபப்படுத்தவும் துணிவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
உமர் பின் கத்தாபின் மனைவியான ஆதிகா பின்த் ஜைத் பின் அம்ர் பின் நுஃபைலிடமிருந்து இமாம் மாலிக் தனது முவத்தாவில் அறிவித்துள்ளார்- அவர் மஸ்ஜிதுக்கு செல்ல உமர் பின் அல்-கத்தாபிடம் அனுமதி கேட்பார். அவர் அமைதியாக இருப்பார். அதனால் அவள் கூறுவாள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் என்னைத் தடுக்காவிட்டால் நான் வெளியேறிச் செல்லுவேன்”. அவர் அவளைத் தடுக்கவில்லை. அவர் கடைபிடிக்க ஆரம்பித்த புதிய தர்க்கமாகவும் நடத்தையாகவும் அது இருந்தது. வலிமையையும் கடுமையும்கொண்டு பிறரை மிகைப்பதற்கு பதிலாக நீதியுடனும் கருணையுடனும் மிகைப்பதற்கு மக்களுக்குக் கற்பிக்கின்றது.
சிறப்பின் அளவுகோல்
இந்தமாற்றத்தையும், அதன் பெறுமானங்கள் மற்றும் அதன் கலாச்சாரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், ஆயிஷாவின் ஹதீஸையும் நாங்கள் காண்கிறோம்: அல்லாஹ்வின் தூதர் – – கூறினார்: “உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவர், நான் என் குடும்பத்திற்கு உங்களில் சிறந்தவன்”. சிறந்தவர், நல்லவர் என்பதற்கான அளவுகோல் ஒரு நபர் தனது குடும்பத்தை, அதாவது அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரை நடத்துவதில் தான் உள்ளது. மார்க்கத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர், தனது குடும்பத்தை சிறப்பாக நடத்துபவர்; தனது குடும்பத்துடன் நல்ல முறையில் நடந்து கொள்பவரே.
இந்த ஹதீஸ் ஒரு சீர் கெட்ட சமூகச் சூழலைக் குறிக்கிறது.என்றாலும் அதுதான் தற்போது நிலவிக்கொண்டிருக்கிறது. நண்பர்களுடான, தோழர்களுடனான உறவுகளில் குறிப்பிடத்தக்க அளவு நன்னடத்தையுடனும் நல்லொழுக்கத்துடனும் பழகும் பல மனிதர்களை காண்கிறோம். நீங்கள் அவர்களிடம் நிறைய மென்மை, மகிழ்ச்சி, பணிவு, ஒழுக்கம்,விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் காண்பீர்கள். ஆனால் அவர்கள் தமது குடும்பத்துடனும், வீட்டுக்குள்ளும் இதற்கு மாற்றமாக இருப்பதைக் காண்பீர்கள்.
பல ஆண்கள் இன்னும் தங்கள் விருப்பங்களையும்,எதேச்சை அதிகாரத்தையும் ,கடுமையையும் பெண்கள் மீது திணிப்பதை தங்கள் முழு ஆண்மையினதும் குடும்ப நிருவாகத்தினதும ஒரு பகுதியாக நம்புகிறார்கள். அவர்களது கருத்துக்களோடு முரண்படக்கூடிய பெண்ணின் கருத்துக்களை கவனத்தில் கொள்வதும், அவளது விருப்பங்களுக்காக அவர்களது விருப்பங்களை விட்டும் இறங்கி வருவதும், அவள் மீது இரக்கம் காட்டுவதும் அவர்களின் ஆண்மைக்கும் அந்தஸ்துக்கும் பொருந்தாத குறைபாடு, பலவீனம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதற்காகவும் இவர்களுக்காகவும் தான் நபி அவர்கள் கூறினார்கள்: “உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவரே, நான் என் குடும்பத்திற்கு சிறந்தவன்.”
எவ்வாறாயினும், எமது இஸ்லாமிய சமூகங்களில் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டுவருகின்ற எமது அழகிய ஒழுக்க மரபுகளின் எச்சங்கள் சிலவற்றில் ஒன்றுதான்: உதவி, உபகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது. உதாரணமாக – இதனை நாம் சனநெரிசலில், காத்திருக்கும் சூழ்நிலைகளில், ரயில்கள், பேருந்துகள் மற்றும் அதுபோன்றவற்றில் அமர்வதற்கு ஓர் இருக்கை தேவைப்படும் வேளையிலும்,கடைகளில் பொருட்கள் கொள்வனவுசெய்யும் வேளையிலும் கண்டுகொள்கின்றோம்.
இந்த கண்ணியமிகு நடத்தைக்கான அடிப்படை நபிமார்களின் வழிமுறைகளில் உள்ளது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல் குர்ஆன் கூறுவது போல:-*((அவர் (மூஸா) மத்யன் நகரிலுள்ள ஓர் கிணற்றின் அருகே வந்த போது அங்கு ஓர் மக்கள் கூட்டத்தை கண்டார். அவர்களைத் தவிர தடைபட்டிருக்கும் இரு பெண்களையும் கண்டார். உங்கள் இருவரது விடயம் என்ன? என்று கேட்டார். இடையர்கள் வெளியேறும் வரை எமக்கு தண்ணீர் புகட்ட முடியாது. எமது தந்தையோ ஒரு பெரிய முதியவராக இருக்கின்றார் என்று கூறினார்கள். எனவே அவர் ( மூஸா) அவர்களுக்கு தண்ணீர்புகட்டிக் கொடுத்தார். பிறகு நிழலின் பக்கம் திரும்பி “என் இரட்சகனே! நீ எனக்கு இறக்கிவைத்த நலவுகளுக்கு நான் தேவை உடையவனாகவே இருக்கின்றேன்.))* ( கஸஸ் : 23 -24)
The views and opinions expressed in this article are those of the author and do not necessarily reflect the official policy or position of rishardnajimudeen.com.
The post பெண்களை நடாத்தும் முறை _ நாகரிகத்தினதும் பண்பாட்டினதும் அளவு கோலாகும் first appeared on Rishard Najimudeen.
]]>The post இலங்கை அரபு மத்ரசா கல்வி- கலந்துரையாடப்பட வேண்டிய சில விடயப்பரப்புகள் first appeared on Rishard Najimudeen.
]]>The post இலங்கை அரபு மத்ரசா கல்வி- கலந்துரையாடப்பட வேண்டிய சில விடயப்பரப்புகள் first appeared on Rishard Najimudeen.
]]>The post உஸுல் அல்-பிக்ஹிலிருந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தல் first appeared on Rishard Najimudeen.
]]>The post உஸுல் அல்-பிக்ஹிலிருந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தல் first appeared on Rishard Najimudeen.
]]>The post மகாஸித் ஆய்வு முறைமை first appeared on Rishard Najimudeen.
]]>The post மகாஸித் ஆய்வு முறைமை first appeared on Rishard Najimudeen.
]]>The post அல்குர்ஆன் முன்வைக்கும் பிரபஞ்ச விதிகள் – சில உதாரணங்கள் first appeared on Rishard Najimudeen.
]]>The post அல்குர்ஆன் முன்வைக்கும் பிரபஞ்ச விதிகள் – சில உதாரணங்கள் first appeared on Rishard Najimudeen.
]]>The post ஸூரா நூஹ்: மையக்கருத்தினூடானதொரு புரிதல் first appeared on Rishard Najimudeen.
]]>சூறா அரம்பமாக இறைத்தூது என்பது என்ன? என்ற கேள்விக்கு மிக சுருக்கமாக பதிலளிக்க முனைகிறது. மூன்று சொற்களினூடாக இஸ்லாமிய தூதின் அடிப்படைகளை விளக்குகிறது. அல்லாஹ்வை வணங்குதல், அவனது அன்பு மற்றும் தண்டனையை உள்ளத்தில் இருத்தி செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளல், இறைதூதருக்கு கட்டுப்படல் ஆகிய மூன்று பகுதிகளும் தூதின் சாரம் எனலாம். அல்லாஹ்வை வணங்குவதன் மூலம் மனிதன் உலகப் பொருட்களுக்கோ, ஏனைய மனிதர்களுக்கோ அடிமையாவதிலிருந்து விடுதலை பெறுகிறான். மனிதன் உலகப் பிடிகளிலிருந்து விடுபடுகிறான். உலகப் பொருட்களை வணங்கி அவற்றை விட தன்னை இழிவானவனாக கருதக் கூடாது என வாதாடும் இஸ்லாம், மனிதனே இப்பிரபஞ்சத்தின் மையப் புள்ளியில் இருக்கக் கூடியவன் எனவும் அதன் நிர்வாகி எனவும் கருதுகிறது. அது அவனுக்கானதொரு கனதியான பொறுப்பு.
உலகை அழகுபடுத்துவதும், வளப்படுத்துவதும் அவன் மீதிருக்கும் கடமைகள். மிகப்பெரும் வணக்கம் அது. அமைதியானதொரு உலகை ஏற்படுத்தி, அடிப்படைத் தேவைகள் பூரணம்பெற்ற சமூகங்களைத் தோற்றுவிப்பதும் அவை தமக்கு மத்தியில் பர்ஸ்பரம் அறிமுகமாகிக் கொள்வதுடன் உதவி ஒத்தாசைகள் செய்து கொள்வதை நோக்கிய பயணம் இஸ்லாத்தின் மிகப்பெரும் இலக்குகளில் ஒன்று. இப்பயணமே இறைத்தூதின் பயணமும். இறைத்தூதர் (ஸல்) அறிமுகப்படுத்தியிருக்கும் தூது மனித தேவைகளைக் கருத்திற்கொண்ட மனிதனுக்கான வாழ்வமைப்பாகும். மனித வாழ்வுக்கு அவசியமான வணக்கங்கள், தனிமனித, குடும்ப, சமூக சட்டங்களை அது கொண்டிருக்கின்றது. மாற்றமுறா வழிகாட்டல்களையும், இடம்-சூழல் காரணிகளுக்கேற்ப மனித அறிவைப்பிரயோகித்து இஜ்திஹாத் செய்யக்கூடிய தன்மையையும் தூது கொண்டிருக்கிறது. இவ்விரு தன்மைகளினூடாக தூது இறுதிநாள் வரை தொடர்ந்தும் வாழ்கிறது, வழிகாட்டுகிறது, நடைமுறை சாத்தியமான வாழ்வமைப்பாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கூறுவதாயின் ஏகத்துவமே தூதின் மையம் எனக் கூற முடியும். வாயால் மொழிந்துவிட்டு அமர்ந்துகொள்ளும் ஏகத்துவமல்ல. மாற்றமாக உலகுக்கு அடிமையாவதிலிருந்து தன்னை விடுவிக்கும் வாழ்வமைப்பைக் காட்டிக்கொடுக்கும் ஏகத்துவம் அது.
இறைவன் ஒருவனை வணக்கத்துக்குரியவனாகவும் பொறுப்பு சாட்டக்கூடியவனாகவும் நம்பும் மனிதன், ஏழை-பணக்காரன், உயர்ந்த சாதி-கீழ்சாதி, உயர்பதவி, அற்பமான பதவி, பிரதேசவாதம், இயக்கவாதம் போன்ற அனைத்து பிரிப்பு முறைகளையும் தாண்டி மனிதன் என்பவன் இறைவனது படைப்பு, ஆதமுடைய பிள்ளைகள் என்ற சமத்துவ பார்வை கொண்டவனாக மாறி விடுகிறான். நீதி, சமத்துவம், அன்பு போன்ற பண்பாட்டு விழுமியங்களோடு மனிதனை அணுகும் அவன், செயல்களில் சிறந்தவரே இறைவனிடம் கண்ணியத்துக்குரியவர் என்ற மிக அடிப்படையான கோட்பாட்டையும் உருவாக்கிக் கொள்கிறான். இவ்வடிப்படைக் கோட்பாட்டையும் விழுமியங்களையும் உலகில் பரப்பும் முயற்சி இலகுவானதல்ல. மிக நீண்டதொரு வேலைத்திட்டம். நூஹ் நபியின் முயற்சி இதற்கான சிறந்ததோர் உதாரணம். சூறாவின் இரண்டாம் பகுதி அவரது அர்ப்பணங்களை விளக்குகிறது.
எல்லா நபிமார்களது முயற்சிகளும் இவ்வாறே இருந்தன. இறுதித் தூதரது (ஸல்) வாழ்வு சிறந்ததொரு சாட்சி. அவரை உண்மையாளர், நம்பிக்கையாளர் என்று கூறியவர்கள் தூதைப் பகிரங்கப்படுத்தியதுடன் தலைகீழாய் நின்றனர். பொய்யர், சூனியக்காரர், வழிகெடுப்பவர் என்றெல்லாம் கூறித் திறிந்தனர். பொருளாதாரத் தடை விதித்தனர். ஏன், கொலை செய்ய கூட முயற்சித்தனர். சொந்த நாட்டை விட்டு விரட்டினர். இறுதித் தூதரின் பின் இத்தூதுக்காக பாடுபட்டவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை அனுபவிக்கும் துன்பங்கள், சித்திரவதைகள் பட்டியல்படுத்த முடியாதவை. நன்மை, தீமை; சத்தியம்; அசத்தியம்; உண்மை; பொய்; நீதி; அநீதி; சமத்துவம், பாரபட்சத்துக்கிடையிலான முரன்பாடு உலக நியதிகளில் ஒன்று என்பது மட்டும் உணமை.
ஏகத்துவத்தை அதன் விரிந்த தளத்தில் புரிந்து நீதி, சமத்துவம் போன்ற அடிப்படைப் பண்பாட்டுப் பெருமானங்களுக்காக உழைக்கும் போது அத்தூது மூலம் பாதிக்கப்படுபவர்கள் அதனை எதிர்க்க முனைகின்றனர். எதிர்ப்பதற்குத் தலைமை தாங்குகின்றனர். இப்பிரிவினர் பற்றியே சூறாவின் மூன்றாம் பகுதி பேசுகிறது. குறிப்பாக, பிழையான தலைமைத்துவம் சமூகத்தையே வழிகெடுத்துவிட்டதாக சூறா கூறுகிறது. “நீங்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கடவுள்களை தொடர்ந்தும் வணங்குங்கள்” என்பதே அவர்களது உபதேசமாக இருந்தது. இத்தலைவர்கள் ஏகத்துவம் கொண்டுவரும் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் எனும் செய்தி தமது சமூக அந்தஸ்த்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்பைக் கவனமாகப் புரிந்திருந்தனர். அதனைப் பாதுகாத்து, அடிமை மனோநிலை கொண்ட மக்கள் கூட்டமொன்றை தமக்குக் கீழால் தொடர்ந்தும் வைத்துக் கொள்ளவே அவர்கள் ஆசைப்படுகின்றனர். ஏகத்துவத்துக்கெதிரான அவர்களது மறுப்பின் பின்னணி சிந்தனை சார்ந்தது என்பதைவிட உளநோய் சார்ந்தது என்பதே பொருத்தம்.
பொதுவாக தலைமைகளது மனோநிலை இதுவாகவே இருக்கிறது. தம்மை ஏனைய மனிதர்களை விட மேலானவர்களாகக் கருதுவதுடன் பொதுமக்களை அடிமை மனோநிலையில் தொடர்ந்தும் வைத்துக் கொண்டு, சுகமான வாழ்வொன்றையே யாசிக்கின்றனர். தன்னை கேள்வி கேட்கும் மக்களை அதிகாரங்கள் மெதுமெதுவாக அந்நியப்படுத்தும். வழிகெடுக்கும் தலைமை நூஹ் நபி எதிர்கொண்ட மிக முக்கிய சவாலாக இருந்தது. இத்தலைமைகள் மக்களை தம் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்ள கையாண்ட உத்தி பாரம்பரியமாக பின்பற்றி வந்த கடவுளர்களை விட்டுவிட வேண்டாம் என்ற உபதேசமாகவே இருந்தது. பொதுவாக, தூது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களுள் ஒன்றாகவும் இது உள்ளது. மூதாதையர்கள் பின்பற்றியது, பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றியது போன்ற வாதங்களால் தூதின் மையக் கருத்துகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்கலாம்.
சூறாவின் கடைசிப் பகுதி சிந்தனை மற்றும் நடத்தைப் பிறழ்வின் உச்ச கட்டத்தை அடைந்த சமூகத்தின் விடிவில் நிராசை அடைந்த நூஹ் நபி புதியதொரு பரம்பரையை உருவாக்குவதே தீர்வு என்ற முடிவுக்கு வருகிறார். வழிகேட்டில் மூழ்கியிருந்த சமூகம் தனது பரம்பரையையும் வழிகெடுத்துவிடும் எனக் கருதுகிறார். அடுத்த பரம்பரை மீது கொண்ட அன்பு காரணமாக தான் இவ்வளவு காலம் நேர்வழிக்கு கொண்டு வர பாடுபட்ட சமூகத்துக்கெதிராக கடுமையாகப் பிரார்த்திக்கிறார்.
The post ஸூரா நூஹ்: மையக்கருத்தினூடானதொரு புரிதல் first appeared on Rishard Najimudeen.
]]>The post பல்லின சமூகங்களுக்கிடைலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும் first appeared on Rishard Najimudeen.
]]>The post பல்லின சமூகங்களுக்கிடைலான நட்புறவும் நபிகள் பெருமானாரின் வழிகாட்டல்களும் first appeared on Rishard Najimudeen.
]]>